இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை தாக்கிய ஈரான்... உயிரோடு இருக்கிறாரா நெதன்யாகு?

'கெய்பர் ஷெகன்' பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டனஇஸ்ரேல் அரசு அல்லது ராணுவம் இந்தத் தாக்குதல் குறித்து இதுவரை எந்த தகவல்களையும் உறுதிப்படுத்தவில்லை.
இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை தாக்கிய ஈரான்... உயிரோடு இருக்கிறாரா நெதன்யாகு?
Published on

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. டெல் அவிவ் நகரில் உள்ள நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் இஸ்ரேலிய விமானப்படைத் தளபதியின் இருப்பிடத்தை குறிவைத்து 'கைபர் ஷெக்கான்' (Kheybar Shekan) வகை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஈரான் கூறியுள்ளது.

"10வது அலை தாக்குதலின் போது, குற்றவாளியான இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் விமானப்படை தளபதியின் இருப்பிடமும் 'கெய்பர் ஷெகன்' பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இலக்கு வைக்கப்பட்டு திடீர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன," என்று ஐ.ஆர்.ஜி.சி தனது டெலிகிராம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இந்த "10-வது அலை" தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பு தெரிவிக்கிறது. தாக்குதல் நடந்த சமயத்தில் நெதன்யாகு அலுவலகத்தில் இருந்தாரா என்பது குறித்தோ, அவரது தற்போதைய நிலை குறித்தோ அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

அவரது நிலை "தெளிவற்றதாக" இருப்பதாக ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் அரசு அல்லது ராணுவம் இந்தத் தாக்குதல் குறித்து இதுவரை எந்த தகவல்களையும் உறுதிப்படுத்தவில்லை. 

X

Maalai Malar
www.maalaimalar.com