என் மலர்tooltip icon

    உலகம்

    Iran War | ஈராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்காவின் கே.சி.-135 ரக ராணுவ விமானம்
    X

    Iran War | ஈராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்காவின் கே.சி.-135 ரக ராணுவ விமானம்

    • ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது 4-வது விமானத்தை இழந்துள்ளது.
    • அமெரிக்காவின் மூன்று எப்-15 ரக போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது.

    ஈரானுக்கு எதிரான அமெரிக்கா-இஸ்ரேலின் போர் 3-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் போரில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவின் ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

    ஈராக்கின் மேற்கு பகுதியில் அமெரிக்காவின் கே.சி.135 ரக வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதில் அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. மற்றொரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை பிரிவு கூறியதாவது:-

    அமெரிக்காவின் கே.சி.-135ரக எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. ஈரானுக்கு எதிரான ஆபரேஷன் எபிக் ப்யூரி நடவடிக்கையின் போது, நட்பு நாடுகளின் வான்பரப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

    இந்தச் சம்பவத்தில் 2 விமானங்கள் சம்பந்தப்பட்டிருந்தன. அதில் ஒரு விமானம் மேற்கு ஈராக்கில் விழுந்தது. மற்றொன்று பாதுகாப்பாகத் தரையிறங்கியது. தற்போது மீட்புப்பணிகள் நடந்து வருகிறது.

    இந்த விபத்து எதிரிகளின் தாக்குதலாலோ அல்லது நட்புப் படைகளின் தவறுதலான தாக்குதலாலோ ஏற்படவில்லை என்று தெ வித்தது. விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர். ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா? விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் என்ன? உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    இதன்மூலம் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது 4-வதுவிமானத்தை இழந்துள்ளது. ஏற்கனவே குவைத் படைகள் தவறுதலாக அமெரிக்காவின் மூன்று எப்-15 ரக போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×