என் மலர்
உலகம்

சவுதி அரேபியா: விமான படைதளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - 5 அமெரிக்க ராணுவ விமானங்கள் சேதம் | Prince Sultan
- பிரின்ஸ் சுல்தான் விமானப் படைதளம் மீது தாக்குதல்
- ஈரான் மீது வரும் நாட்களில் மிகவும் கடுமையான ராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தும்.
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப் படைதளம் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதில் அமெரிக்க விமானப்படையின் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்துள்ளன. மொத்தம் 5 விமானங்கள் சேதம் அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதேவேளையில் விமானங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும் அவை பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், ஈரானுக்கு எதிரான நடவடிக்கையின்போது அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று ஈராக்கின் மேற்குப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
தங்களது தாக்குதலால் தான் அந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இருப்பினும், எதிரிகளின் தாக்குதலால் இந்த விபத்து நடக்கவில்லை என்றும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஈரான் மீது வரும் நாட்களில் மிகவும் கடுமையான ராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தும் என்று அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய தளமாக இயங்கி வரும் கார்க் தீவு மீது அமெரிக்கா இன்று நடத்திய தாக்குதலில் அங்குள்ள ராணுவ கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.






