என் மலர்
உலகம்
X
பாசத்தில் நாய்களை மிஞ்ச ஆள் இல்லை- வைரலாகும் வீடியோ
Byமாலை மலர்23 Nov 2024 7:39 AM IST
- வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
- மூத்த சகோதரனை போல அந்த நாய் குழந்தையின் வயிற்றில் படுத்துக் கொண்டு கட்டி தழுவுகிறது.
ஆதிகாலம் முதலே மனிதன் செல்லப்பிராணியாக நாய்களை வளர்த்து வந்துள்ளான். சில நேரங்களில் மற்ற மனிதர்களிடம் அவை கடுமையாக நடந்து கொண்டாலும் தனது உரிமையாளர்களிடம் பாசத்தை காட்ட தவறுவதில்லை. அவர்களை தனது குடும்பமாகவே கருதுகிறது.
அதேபோன்ற ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது ஒரு நாய் தனது உரிமையாளரின் குழந்தை அருகே படுத்து தூங்குகிறது. அப்போது மூத்த சகோதரனை போல அந்த நாய் குழந்தையின் வயிற்றில் படுத்துக் கொண்டு கட்டி தழுவுகிறது.
லட்சக்கணக்கானோரின் பார்வையை பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்த பலரும் பாசத்தில் நாய்களை மிஞ்ச ஆள் இல்லை என்பது போன்ற பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
— Buitengebieden (@buitengebieden) November 20, 2024
Next Story
×
X