என் மலர்
சிலி
- கடற்கரை பகுதியில் கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது.
- முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்குட்:
கடல்வாழ் உயிரினங்களில் மிகப்பெரியதாக நீல திமிங்கலம் இருந்து வருகிறது. ஆழமான கடற்பகுதியில் இது வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சிலி நாட்டின் அன்குட் தீவு பகுதியில் பிரமாண்டமாக காட்சி அளிக்கும் நீல திமிங்கலம் கரை ஒதுங்கி கிடந்தது. இதை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த திமிங்கலம் எப்படி கரைக்கு வந்தது என்பது தெரியவில்லை. அந்த கடற்கரை பகுதியில் கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது. இதனால் கப்பலில் மோதி அது கரைக்கு வந்ததா? அல்லது பருவநிலை மாற்றம் காரணமாக ஒதுங்கயதா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
- சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இது 6.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
சாண்டியாகோ:
பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் தென் அமெரிக்கா கண்டத்தின் வடக்கு மூலையில் அமைந்துள்ள சிலி நாடு புவியியல் அமைப்பின் படி அடிக்கடி நிலநடுக்கத்துக்கு உள்ளாகும் நெருப்பு வளையம் பகுதியில் உள்ளது.
இந்நிலையில், சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியால் அலறியபடி தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டு நின்றனர்.
சான்ட்டியாகோ நகரின் தென்மேற்கே சுமார் 328 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
- காட்டுத்தீ சிக்கி 500க்கும் மேர்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
- காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சான்டியாகோ:
சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மொத்தம் 34 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி உள்ளதாகவும், இதுவரை 65 காட்டுத்தீ சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, நாடு முழுவதும் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிலியில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. பயோபியா பகுதியில் 16 பேர், லா அருணாசியாவில் 5 பேர், நுபில் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
- காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மொத்தம் 34 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி உள்ளதாகவும், இதுவரை 65 காட்டுத்தீ சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- செய்தியாளரின் ஒரு காதின் இயர்போனை எடுத்துக் கொண்டு பறந்து சென்றது.
- நேரலையில் பதிவான இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
சிலி நாட்டில் செய்தியாளர் ஒருவர் காதில் இயர் போன் மாற்றிக் கொண்டு செய்தியை நேரலையில் அறிவித்து வந்தார். அப்போது, எங்கிருந்தோ வந்த கிளி ஒன்று செய்தியாளரின் இயர்போனை அலேக்காக திருடிய சம்பவம் வேடிக்கையாக மாறியது.
நிகோலஸ் கிரம் என்ற செய்தியாளரின் தோள் மீது அமர்ந்த கிளி, அவரது ஒரு காதின் இயர்போனை எடுத்துக் கொண்டு பறந்து சென்றது.
நேரலையில் பதிவான இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
- சிலி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுனர் குழு ஆய்வு.
- 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் டைனோசர்களின் கால்தடங்களை கண்டுபிடித்தனர்.
சிலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஹூடாகோண்டோ என்ற சிறிய நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டைனோசர்களின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிலி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுனர் குழு ஆய்வு மேற்கொண்டபோது 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் டைனோசர்களின் கால்தடங்களை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து ஆய்வாளர் கிறிஸ்டியன் சலாசர் கூறும்போது, இது தனது அனுபவத்தில் இதுவரை இல்லாத ஒன்று என்றும், 10 நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்தடங்களை கண்டுபிடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இது மிகப்பெரிய திட்டத்தின் தொடக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.






