என் மலர்tooltip icon

    வங்காளதேசம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3.6 பில்லியன் டாலர் செலவில் வங்கதேசத்தின் முழு நிதியளிக்கப்பட்ட பல்நோக்கு ரெயில்- சாலை பாலம் ஆகும்.
    • இந்த பாலம் நமது பெருமை, நமது திறன், நமது வலிமை மற்றும் நமது கண்ணியத்தின் சின்னம்.

    பங்களாதேஷில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பத்மா பாலத்தை பிரதமர் ஷேக் ஹசீனா இன்று திறந்து வைத்தார். இது நாட்டின் மிக நீளமானது மற்றும் முற்றிலும் உள்நாட்டு நிதியில் கட்டப்பட்டது ஆகும்.

    இது 6.15 கி.மீ நீளமுள்ள சாலை- ரெயில் நான்கு வழி பாலம், தென்மேற்கு வங்கதேசத்தை தலைநகர் மற்றும் பிற பகுதிகளுடன் இணைக்கும் பத்மா நதியின் மீது கட்டப்பட்டுள்ளது.

    3.6 பில்லியன் டாலர் செலவில் வங்கதேசத்தின் முழு நதியளிக்கப்பட்ட பல்நோக்கு ரெயில்- சாலை பாலம் ஆகும்.

    பத்மா பாலத்தை திறந்து வைத்த வங்கதேசத் தலைவர் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாவது:-

    எனக்கு யார் மீதும் எந்த புகாரும் இல்லை. ஆனால் பத்மா பாலம் கட்டுமான திட்டத்தை எதிர்த்தவர்கள் மற்றும் அதை குழாய் கனவு என்று அழைத்தவர்கள், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் என்று நான் கருதுகிறேன். இந்த பாலம் அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.

    இந்த பாலம் வெறும் செங்கல், சிமெண்ட், இரும்பு மற்றும் கான்கிரீட் அல்ல. இந்த பாலம் நமது பெருமை, நமது திறன், நமது வலிமை மற்றும் நமது கண்ணியத்தின் சின்னம். இந்த பாலம் வங்கதேச மக்களுக்கு சொந்தமானது. பத்மா பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட மக்களுக்கு நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முற்றிலும் உள்நாட்டு நிதியளிப்புடன் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
    • வங்காளதேசத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவும் என்று கருதப்படுகிறது.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் ஓடும் பத்மா ஆற்றின் மீது 6.15 கீ.மீ நீளம் கொண்ட பாலத்தை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. சாலை, ரயில் என நான்கு வழி போக்குவரத்து வசதியுடன் கூடிய இந்த பாலத்தை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று திறந்து வைக்கிறார்.

    வங்காளதேசத்தின் 19 தென்மேற்கு மாவட்டங்களை மற்ற பகுதிகளுடன் இந்த பாலம் இணைக்கிறது.இதனால் அந்நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவும் என்று கருதப்படுகிறது.

    வெளிநாட்டு நிதி உதவி இன்றி முற்றிலும் உள்நாட்டு நிதியளிப்புடன் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலப்பணிகள் வெற்றிகரமாக முடிந்து திறக்கப்படுவதற்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம் நிறைவடைந்திருப்பது பிரதமர் ஷேக் ஹசீனாவின் தொலைநோக்கு பார்வை மற்றும் துணிச்சலான முடிவைக் காட்டுகிறது என்று டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    • வங்காளதேசத்தில் கடந்த காலங்களில் இல்லாத அளவு தற்போது பேய் மழை கொட்டி வருகிறது.
    • கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை அந்த நாடு எதிர்கொண்டுள்ளது.

    டாக்கா:

    வங்காளதேசத்தின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன.

    கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, சில்ஹெட் மற்றும் சுனம்கஞ்ச் ஆகிய இரு மாவட்டங்களும் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இரு மாவட்டங்களிலும் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

    வீடுகளை இழந்த மக்கள் பள்ளிக்கூடங்களில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து முடங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழைக்கு இதுவரை சிறுவர்கள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கனமழையால் சுமார் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காயமடைந்தவர்களுக்கு ராணுவ கிளினிக்குகள் உள்பட உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் கிடங்கில் சில ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட ரசாயனங்கள் இருந்தது.

    வங்கதேசத்தின் முக்கிய கடல் துறைமுகமான சிட்டகாங் பகுதி வெளியே 40 கி.மீ தொலைவில் உள்ள உள்நாட்டு சேமிப்புக் கிடங்கில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததை அடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அப்போது கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் உள்பட சுமார் 100 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த தீ விபத்தில், 5 பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்களில் 60 முதல் 90 சதவீதம் தீக்காயங்களுடன் 20 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

    காயமடைந்தவர்களுக்கு ராணுவ கிளினிக்குகள் உள்பட உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படடு வருகின்றன.

    விபத்து குறித்து வங்கதேச இன்லேண்ட் கண்டெய்னர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ரூஹூல் அமின் சிக்தர் கூறியதாவது:-

    30 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் கிடங்கில் சில ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட ரசாயனங்கள் இருந்தது. கிடங்கில் 600 பேர் பணியாற்றி வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×