என் மலர்tooltip icon

    உலகம்

    அடுத்தடுத்த நிலநடுக்கங்கள்: அதிர்ச்சியில் மியான்மர் மக்கள்
    X

    அடுத்தடுத்த நிலநடுக்கங்கள்: அதிர்ச்சியில் மியான்மர் மக்கள்

    • மியான்மரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.

    நேப்பிடாவ்:

    மியான்மர் நாட்டில் இன்று அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.

    தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி மியான்மரில் காலையில் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.

    இதேபோல், அதிகாலையில் 12.26 மற்றும் 12.52 மணியளவில் என இரு முறையும் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    கடந்த 24 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

    Next Story
    ×