என் மலர்tooltip icon

    உலகம்

    6000 வீரர்களின் உடல்கள் பரிமாற்றம்.. உக்ரைன் - ரஷியா அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவு
    X

    6000 வீரர்களின் உடல்கள் பரிமாற்றம்.. உக்ரைன் - ரஷியா அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவு

    • சுமார் இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் நேற்று இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
    • படுகாயமடைந்தவர்கள் மற்றும் இளைஞர்களை விடுவிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் உமெரோவ் கூறினார்.

    மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவும் உக்ரைனும் துருக்கியில் மீண்டும் நேற்று நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன.

    சுமார் இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் நேற்று இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

    ரஷியாவின் போர் விமானத் தளங்கள் மீது உக்ரைன் ஒரு பெரிய டிரோன் தாக்குதலை நடத்திய மறுநாளே இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதில் போரில் கொல்லப்பட்ட சுமார் 6,000 வீரர்களின் உடல்களை ரஷியாவும் உக்ரைனும் பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹிரோனிமி டைக்வி வெளியிட்ட தகவலின்படி, கூட்டத்திற்குப் பிறகு, போர்க் கைதிகள் (POW) பரிமாற்றம் குறித்து ஒரு புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக படுகாயமடைந்தவர்கள் மற்றும் இளைஞர்களை விடுவிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் உமெரோவ் கூறினார்.

    உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, " போர்க் கைதிகளை விடுவிப்பதற்கு நாங்கள் மீண்டும் தயாராகி வருகிறோம்" என்றார்.

    கடந்த பேச்சுவார்த்தையிலும் போர் கைதிகளை இரு நாடுகளும் பரிமாறிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×