என் மலர்
உலகம்

வானில் பறந்த கிறிஸ்துமஸ் தாத்தா- வீடியோ வைரல்
- அதிகளவிலான டிரோன்களை பயன்படுத்தி சாகசம் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றது.
- வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி 10 கோடி பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் களைகட்ட தொடங்கி உள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மான்ஸ்பீல்ட்டு நகரில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று டிரோன் சாகசத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
அந்த வகையில் இரவுநேரத்தில் வானத்தில் 5 ஆயிரம் டிரோன்களை பயன்படுத்தி வானில் உலா வரும் வகையிலான ராட்சத கிறிஸ்துமஸ் தாத்தா போன்ற தோற்றத்தை உருவாக்கினர். வானில் பறக்கவிடப்பட்ட டிரோன்களால் ஆன பூமி உருண்டையை பின்னணியாக கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா ஒருவர் பரிசுபெட்டியுடன் கலைமான்களால் பூட்டப்பட்ட ரதத்தில் உட்கார்ந்தவாறு செல்வதை காட்சிப்படுத்தினர்.
அதிகளவிலான டிரோன்களை பயன்படுத்தி சாகசம் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி 10 கோடி பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
Next Story






