என் மலர்
உலகம்

லிவிவ் நகரம்
உக்ரைனின் பாதுகாப்பான இடம் என கருதப்பட்ட லிவிவ் நகர் மீது ரஷியா தொடர் ஏவுகணை தாக்குதல்
இந்த தகவலை லிவிவ் மேயர் ஆண்ட்ரி சாடோவி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 54-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷியா உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் சில இடங்களில் ரஷியாவால் கைப்பற்றப்பட்ட இடங்களை மீட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை மேற்கு உக்ரைன் நகரமான லிவிவ் மீது தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
லிவிவ் மற்றும் பிற மேற்கு உக்ரேனிய பகுதிகள் இந்த போரினால் குறைந்ததாக பாதிக்கப்பட்டதாக கருத்தப்பட்டன. குறிப்பாக லிவிவ் மற்ற நகரங்களை விட பாதுகாப்பானது எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று அந்த நகரத்தின் மீது வரிசையாக ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தகவலை லிவிவ் மேயர் ஆண்ட்ரி சாடோவி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Next Story






