search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இலங்கை கொடி
    X
    இலங்கை கொடி

    கப்பல் மூலம் இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் டன் டீசல் இலங்கைக்கு சென்றது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித்தது. இதற்கிடையே இந்தியா அறிவித்த கடன் வரம்புக்கு கீழ் 40 ஆயிரம் டன் டீசல் இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்டது.

    கொழும்பு:

    இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவின் உதவியை அந்நாட்டு அரசு நாடியது. இந்தியா வந்த இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

    இதையடுத்து இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித்தது. இதற்கிடையே இந்தியா அறிவித்த கடன் வரம்புக்கு கீழ் 40 ஆயிரம் டன் டீசல் இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்டது.

    டீசல்

    அந்த கப்பல் இலங்கையில் உள்ள துறைமுகத்தை சென்றடைந்தது. இந்தியா அனுப்பிய டீசல் இன்று மாலை இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கையில் டீசல் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டது. டீசலை இறக்குமதி செய்ய முடியாததால் டீசல் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்கள், சரக்கு வாகனங்கள் உள்பட பொது போக்குவரத்து கடுமையாக பாதிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படியுங்கள்... டெல்லி நேரு பூங்காவில் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி

    Next Story
    ×