என் மலர்

    உலகம்

    தலிபான்
    X
    தலிபான்

    பணியில் இருக்கும் பெண்கள் தேவைப்பட்டால் போர்வையால் கூட மறைக்க வேண்டும்- தலிபான்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெண்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் வேலை இழக்க நேரிடும் என்று தலிபான் எச்சரிக்கைவிட்டுள்ள.
     ஆப்கானிஸ்தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு பல்வேறு தடைகளை விதித்தது. குறிப்பாக, குழந்தைகள், பெண்களுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்து மக்களை துன்புறுத்தி வருகிறது.

    ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய ஆடைகளுக்கு தடை, ஆண்கள் தாடி எடுக்க வேண்டாம் என்று கட்டளையிடப்பட்டனர். மேலும் மக்கள் தொழுகைக்கு விரைந்து செல்லாவிட்டால் அவர்கள் தாக்கப்பட்டனர். தொலைக்காட்சியில் பெண்கள் இடம்பெறும் நாடகங்களுக்கும், பொது இடங்களில் இசை ஒலிக்கவும் தடை விதிக்கப்பட்டன.

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து பெரும்பாலான பெண்கள் தங்கள் அரசாங்க வேலைகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான்  அரசுத் துறையில் பணிபுரியும் பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் தேவைப்பட்டால் போர்வையால் கூட மறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் வேலை இழக்க நேரிடும் என்றும் தலிபான் எச்சரித்துள்ளது.

    இதுகுறித்து நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

    அதில் கூறியிருப்பதாவது:-

    பெண்கள் சரியான பாதுகாப்பு இல்லாமல் வேலைக்குச் செல்லக் கூடாது. அவர்கள் விழகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்றால் பணிநீக்கம் செய்யப்படும்.

    பெண்கள் ஹிஜாபை அவர்கள் விரும்பும் வகையில் அணிந்துக் கொள்ளலாம். அது அவர்களின் விருப்பம். ஆனால் அதனைக் கொண்டு தங்களை சரியாக மறைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் ஒரு போர்வையால் கூட மறைத்துக் கொள்ளலாம். கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் வேலை இழக்க நேரிடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டடிருந்தது.

    இதையும் படியுங்கள்.. உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற மேலும் நான்கு சிறப்பு விமானங்கள்
    Next Story
    ×