search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பூஸ்டர் தடுப்பூசி (கோப்பு படம்)
    X
    பூஸ்டர் தடுப்பூசி (கோப்பு படம்)

    இங்கிலாந்தில் இன்று 16, 17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

    கொரோனாவை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த மாதம் முதல் 1 லட்சத்துக்கு கீழாகவே பதிவாகி வருகிறது. கடந்த சனிக்கிழமை தினசரி பாதிப்பு 81 ஆயிரத்து 713ஆக இருந்தது.

    இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.

    இந்த திட்டத்துக்கு தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு 3 மாதங்கள் நிறைவடைந்த 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம்.

    கொரோனா  வைரஸ்

    இதுகுறித்து தேசிய சுகாதார சேவைகள் அமைப்பின் தடுப்பூசி திட்ட துணை தலைவர் நிக்கி கனேனி கூறியதாவது:-

    இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5-ல் 4 பேர் ஏற்கனவே பூஸ்டர் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். இப்போது இந்த திட்டத்தை 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு விரிவுப்படுத்தி உள்ளோம். இதன்மூலம் இந்த குளிர் காலத்தில் அவர்கள் தங்கள் நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து கொள்ள முடியும்.

    ஒவ்வொருவரும் தாமாகவே முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கொரோனாவுடன் வாழ்வதற்கு நாம் கற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... ஜல்லிக்கட்டு போட்டியில் நடனமாடி காளையர்களை உற்சாகப்படுத்திய சென்னை மூதாட்டி

    Next Story
    ×