search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கோப்பு புகைப்படம்
    X
    கோப்பு புகைப்படம்

    கொரோனா தடுப்பூசியில் இருந்து தப்பிக்க மகன்களை கடத்திய பெண்

    தனது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமா, கூடாதா என்பதை நான் தான் முடிவெடுக்க வேண்டும் என கணவருக்கு கடிதம் எழுதினார்.
    மாட்ரிட்

    ஸ்பெயின் நாட்டில் 5 முதல் 11 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த 45 வயது பெண்மணி ஒருவர், தனது 14 மற்றும் 12 வயது மகன்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை தடுக்க, அவர்களை கடத்திச் சென்றுள்ளார்.

    அந்த பெண்மணி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவரது இரு மகன்களும் தந்தையிடம் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் பள்ளி முடிந்து இரு மகன்களையும் அழைத்து சென்ற பெண்மணி, தனது பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமா, கூடாதா என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என கணவருக்கு கடிதம் எழுதி தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுவர்களின் தந்தை போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து அந்த பெண் சரணடைந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம் அந்த பெண்மணியை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×