என் மலர்

  செய்திகள்

  இந்தியாவுக்கான நிரந்தர தூதர் டிஎஸ் திருமூர்த்தி
  X
  இந்தியாவுக்கான நிரந்தர தூதர் டிஎஸ் திருமூர்த்தி

  மியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் - ஐநாவில் இந்தியா கருத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்தார்.
  ஜெனீவா:

  மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த 1-ம் தேதி கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. மேலும், அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

  மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக அமெரிக்கா, மியான்மர் ராணுவத்தை வன்மையாக கண்டித்ததோடு மட்டுமல்லாமல் ராணுவ தலைவர்கள் மீது பொருளாதார தடைகளையும் விதித்தது.

  இதற்கிடையே, மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேசமயம் மியான்மர் ராணுவம் இந்தப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முயற்சித்து வருகிறது.

  இந்நிலையில், ஐக்கிய நாடுகள் அவையில் மியான்மர் விவகாரம் குறித்து இந்தியாவுக்கான நிரந்தர தூதர் டிஎஸ் திருமூர்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

  மியான்மரில் சமீப காலங்களில் ஏற்படும் நிலவரங்களை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.  தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அமைதியிலான மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் மியான்மர் தலைமை தீர்த்துக்கொள்ள வேண்டும். மியான்மருடன் இந்தியா நில மற்றும் கடற்பரப்பை பகிர்ந்து கொள்கிறது.

  எனவே, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் நேரடி பங்கு உள்ளது. மியான்மருக்கும் அந்நாட்டுக்கு மக்களுக்கும் இந்தியா நெருங்கிய நண்பராக உள்ளது. அங்குள்ள சூழலை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதோடு ஒத்த கருத்துடைய நாடுகளிடம் இதுகுறித்து தொடர்ந்து ஆலோசிப்போம். அப்போதுதான், மக்களின் நம்பிக்கை மற்றும் விருப்பங்கள் மதிக்கப்படும் என தெரிவித்தார்.
  Next Story
  ×