search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்டு டிரம்ப்
    X
    டொனால்டு டிரம்ப்

    தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் - டிரம்ப் பிடிவாதம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வியை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்,

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் ஜனவரி 20-ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

    ஆனால், தற்போதைய அதிபரான டொனால்டி டிரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

    தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக அவர் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். மேலும், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம்சுமத்தி நீதிமன்றத்திலும் வழக்குத்தொடர்ந்தார். அந்த வழக்குகள் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஆனால், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப் மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும் படியும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும்படியும் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையில், ஜோ பைடன் வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. 

    பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், வாஷிங்டன்னில் வெள்ளைமாளிகைக்கு வெளியே திரண்டிருந்த ஆதராவாளர்களை அதிபர் டிரம்ப் சந்தித்தார். அப்போது டிரம்ப் பேசியதாவது:-

    நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டோம். நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் (தேர்தல் தோல்வி). நாம் தேர்தல் திருட்டை தடுத்து நிறுத்துவோம்.

    மைக் பென்ஸ் எங்களுக்காக வர வேண்டும். அவர் அவ்வாறு செய்யாவிட்டால் அது நமது நாட்டுக்கு சோகமான நாளாக அமையும். எனென்றால் அரசியலமைப்பை பாதுகாப்பதாக நீங்கள் (மைக் பென்ஸ்) சத்தியப்பிரமாணம் செய்துள்ளீர்கள்

    என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×