என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க மோப்ப நாய்களுக்கு பயிற்சி - இங்கிலாந்தில் புதிய முயற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் கொரோனா நோயாளிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்று இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது.
  லண்டன்:

  இங்கிலாந்து நாட்டை கொரோனா வைரஸ் சீரழித்து சின்னா பின்னமாக்கி விட்டது. அங்கு உயிரிழப்பு நாளுக்கு நாள் பலமடங்கு அதிகரித்துக் கொண்டே போகிறது.

  இங்கிலாந்தில் தினசரி, கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை 21 ஆயிரம் என்னும் அளவிற்கே உள்ளது.

  இதை ஒரு லட்சம் என அதிகரித்தால்தான் நாடு முழுவதும் கொரோனா தாக்கியவர்களை முழுமையாக கண்டுபிடித்து தீவிர சிகிச்சை அளிக்க முடியும் என்னும் பரிதாபநிலை காணப்படுகிறது.

  இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களை மோப்ப நாய்கள் மூலம் உடனடியாக கண்டுபிடிக்க பயிற்சி அளிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  ஏற்கனவே மோப்ப நாய்கள் மூலம் மலேரியா தாக்கியவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதில் வெற்றி கண்ட இங்கிலாந்தின் ‘மெடிக்கல் டிடெக்சன் டாக்ஸ் சாரிட்டி‘ என்ற தொண்டு நிறுவனம் இதற்கு முன்வந்துள்ளது.

  இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தலைவர் கிளாரியா கூறியதாவது:

  கொரோனா நோய் பாதித்தவர்களை சில வினாடிகளில் மோப்ப நாய்கள் கண்டுபிடித்துவிடும் வகையில் தகுந்த பயிற்சி அளிக்க முடியும். 6 முதல் 8 வார பயிற்சி இதற்கு போதுமானது.

  ‘லேப்ரடார் ரெட்ரீவர்‘ இன நாய்களின் 3 வகைகளை இதற்கென பிரத்யேகமாக பயன்படுத்தலாம்.

  இந்த நாய்கள் கொரோனா அறிகுறி உள்ளவர்களையும், இல்லாதவர்களையும் உடனடியாக தனது மோப்ப சக்தியால் அடையாளம் கண்டுவிடும்.

  இப்படி பாதிக்கப்பட்டவர்களை விமான நிலையத்திலேயே தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு கொண்டு போய்விடலாம். இந்த மோப்ப நாய்களை இங்கிலாந்தில் உள்ள அத்தனை விமான நிலையங்களிலும் பயன்படுத்தி கொரோனா நோயாளிகளே நாட்டுக்குள் நுழைய முடியாதவாறு செய்துவிடலாம்.

  லேப்ரடார் இனத்தின் 3 ரக நாய்களுக்கும் பயிற்சி அளிக்க 5 லட்சம் பவுண்டுகள்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.8கோடி) செலவு பிடிக்கும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்த நாய்களுக்கு இன்னும் சிறப்பான பயிற்சியை அளித்தால் ‘ரேபிட் டெஸ்ட் கிட்‘ கூட தேவைப்படாது, போலிருக்கிறதே!
  Next Story
  ×