என் மலர்
செய்திகள்

பஸ் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் பலி - ரஷியாவில் சோகம்
ரஷியாவில் பஸ் கவிழ்ந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #RussiaBusAccident
மாஸ்கோ:
ரஷியாவின் யார்ட்சேவோ பகுதியில் இருந்து கலுகா மாவட்டத்தை நோக்கி ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் குழந்தைகள் உள்பட சுமார் 40க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். அவர்கள் பியானோ இசை நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தனர்.
கலுகா மாவட்டம் யஷ்னோவ்ஸ்கி பகுதி அருகில் வரும்போது பஸ் திடீரென கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த நான்கு குழந்தைகள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #RussiaBusAccident
Next Story






