என் மலர்

  செய்திகள்

  பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன் - இம்ரான் கான்
  X

  பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன் - இம்ரான் கான்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இரு நாடுகளுக்கு இடையே அமைதி நிலவ பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். #ImranKhan #PMModi #KashmirIssue
  இஸ்லாமாபாத்: 

  பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் இம்ரான்கான். இஸ்லாமாபாத்தில் இவர் இந்திய செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

  இந்தியாவுடன் அமைதி நிலவுவதையே பாகிஸ்தான் மக்கள் விரும்புகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினால் நான் மகிழ்ச்சி அடைவேன். அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன். இதற்காக மக்களின் மனநிலை மாற வேண்டும்.  வெளிநாடுகளில் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகளை பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்த அனுமதிப்பது எங்களின் நோக்கம் கிடையாது.

  காஷ்மீர் விவகாரம் தீர்க்க கூடிய பிரச்னைதான். முயன்றால் முடியாதது என எதுவும் கிடையாது. காஷ்மீர் பிரச்னைக்கு ராணுவ ரீதியிலான தீர்வு ஏற்படாது. இந்தியாவுடனான எந்த பிரச்சனை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார்.

  இந்தியாவில் பொதுத்தேர்தல் முடியும் வரை அமைதி பேச்சுவார்த்தைக்காக காத்திருக்க நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார். #ImranKhan #PMModi #KashmirIssue
  Next Story
  ×