என் மலர்

  செய்திகள்

  ஆசியா பீவியின் வழக்கறிஞரை பாகிஸ்தானை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தவில்லை - ஐநா தகவல்
  X

  ஆசியா பீவியின் வழக்கறிஞரை பாகிஸ்தானை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தவில்லை - ஐநா தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதநிந்தனை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பீவியின் வழக்கறிஞரை பாகிஸ்தானை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதாக கூறியதாக ஐ.நா. மறுத்துள்ளது. #AsiaBibi #UN #LawyerSaifulMulook
  நியூயார்க்:

  பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேறு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

  மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, தெஹ்ரீ-இ-லப்பாயிக் பாகிஸ்தான் (டிஎல்பி) கட்சி போராட்டத்தை திரும்ப பெற்றது. முக்கிய கட்சியான டிஎல்பி போராட்டத்தைக் கைவிட்டதால் பாகிஸ்தானில் இயல்பு நிலை திரும்புகிறது.  இற்கிடையே ஆசியா பீவி தரப்பில் கோர்ட்டில் ஆஜரான வக்கீல் சைபுல் மாலூக் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி நாட்டை விட்டு வெளியேறினார்.

  பாகிஸ்தானில் இருந்து நெதர்லாந்தின் தி ஹேக் நகருக்கு சென்றடைந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆசியா பீவி விடுதலைக்கு எதிராக போராட்டம் நடந்தபோது, தனக்கு ஐநா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் பாதுகாப்பு அளித்ததாகவும், பின்னர் தனது விருப்பத்திற்கு மாறாக வெளிநாடு செல்லும்படி விமானத்தில் ஏற்றி அனுப்பியதாகவும் கூறினார்.

  இந்த குற்றச்சாட்டை ஐநா செய்தித் தொடர்பாளர் எரி கனேகோ மறுத்துள்ளார். வழக்கறிஞர் சாய்புல் முலூக் கேட்டுக்கொண்டதால் பாகிஸ்தானில் உள்ள ஐநா அலுவலகம் அவருக்கு உதவி செய்ததாகவும், நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தவில்லை என்றும் ஐநா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். #AsiaBibi #UN #LawyerSaifulMulook
  Next Story
  ×