search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடையை மீறி யூரேனியம் செறிவூட்டும் ஈரான் - மேற்கத்திய நாடுகள் ராணுவ நடவடிக்கைக்கு இஸ்ரேல் அழைப்பு
    X

    தடையை மீறி யூரேனியம் செறிவூட்டும் ஈரான் - மேற்கத்திய நாடுகள் ராணுவ நடவடிக்கைக்கு இஸ்ரேல் அழைப்பு

    சர்வதேச அணு சக்தி முகமையின் தடையை மீறி யூரேனியம் செறிவூட்டப் போவதாக அறிவித்துள்ள ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.#Iran #Israel
    ஜெருசலேம்:

    அணுசக்திக்கு தேவையான யூரேனியத்தை செறிவூட்டும் நிலயத்தை செயல்படுத்தி அதிகமான உற்பத்தியை தொடங்கவுள்ளதாக என சர்வதேச முகமையிடம் ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சர்வதேச அணு சக்தி முகமையின் தடையை மீறி யூரேனியம் செறிவூட்டப் போவதாக அறிவித்துள்ள ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை மந்திரி யிஸ்ரயேல் காட்ஸ் இன்று அந்நாட்டு வானொலி மூலம் ஆற்றிய உரையில் கூறியதாவது:-

    ஈரானியர்கள் இப்போது சரணடையாமல் கண்காணிப்பு இல்லாத வகையில் மீண்டும் யூரேனியம் செறிவூட்ட முற்பட்டால் இதற்கு எதிராக அமெரிக்க அதிபர் மற்றும் மேற்கத்திய நாடுகள் கூட்டமைப்பு சார்பில் தெளிவாக விளக்க அறிக்கை வெளியிடப்பட வேண்டும். அவர்களுடன் இதர அரபு நாடுகளும் இஸ்ரேலும் நிச்சயமாக உடனிருக்கும்.

    ஈரான் மீண்டும் அணு ஆயுதங்களை தயாரிக்கும் பழையப் பாதைக்கு திரும்பினால், அந்நாட்டுக்கு எதிராக ஒரு ராணுவ கூட்டணி உருவாக்கப்படும் என்பது அந்த அறிக்கை கூறும் செய்தியாக அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை மந்திரி வெளியிட்டுள்ள இந்த கருத்து, சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×