search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் ஆப்ரிக்காவில் கார் கடத்தல் கும்பலால் இந்திய வம்சாவளி சிறுமி உயிரிழப்பு - நடவடிக்கை கோரி போராட்டம்
    X

    தென் ஆப்ரிக்காவில் கார் கடத்தல் கும்பலால் இந்திய வம்சாவளி சிறுமி உயிரிழப்பு - நடவடிக்கை கோரி போராட்டம்

    தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி சிறுமி மர்ம நபர்களால் கடத்த முயற்சிக்கும்போது கொல்லப்பட்டாள். இதற்கு நீதி கேட்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். #southafrica #IndianOriginGirl #killed #Indiantownship
    கேப்டவுன்:

    தென் ஆப்ரிக்காவின் டர்பன் பகுதியில் சதியா சுக்ராஜ் என்ற 9 வயது சிறுமி அவரது தந்தையுடன் காரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது, அங்கு ஆயுதங்களுடன் வந்த கார் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேர் காருடன் சேர்த்து சிறுமியை கடத்திச் சென்றனர்.

    இதனை கண்ட அப்பகுதி வாழ் இந்தியர்கள் அந்த காரை துரத்திச் சென்றனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். இந்த சம்பவத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அப்போது சிறுமி சதியா சுக்ராஜ் துப்பாக்கியால் சுடப்பட்டு மயங்கி கிடந்தாள். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதையடுத்து சிகிச்சை பலனின்றி சதியா பரிதாபமாக உயிரிழந்தார். கார் கவிழ்ந்த விபத்தில் கடத்தல் காரர்களில் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். ஒருவன் கைது செய்யப்பட்டான். மேலும் ஒருவன் தப்பியோடிய நிலையில், காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர் சிறுமியின் உயிரிழப்பு சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாட்ஸ்வொர்த் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் சுமார் மூவாயிரம் பேர் பங்கேற்றனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி கூட்டத்தை கலைத்தனர். #southafrica #IndianOriginGirl #killed #Indiantownship
    Next Story
    ×