என் மலர்

  செய்திகள்

  வெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்
  X

  வெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்கொரியா அதிபர் மூன் ஜே - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான உயர்மட்ட சந்திப்பு வரும் 22-ம் தேதி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெறுகிறது. #Trump #SouthKoreanpresident
  வாஷிங்டன்:

  விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு இன்று நடைபெற்று வருகிறது.

  இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் அன் தனது நாட்டு எல்லையை கடந்து அங்கு சென்றார்.

  கடந்த 1953-ம் ஆண்டில் கொரியா போர் முடிந்த பின்னர் வடகொரியா தலைவர் ஒருவர், தென்கொரியாவுக்கு சென்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் 9 பேர் அடங்கிய உயர்நிலை குழுவினரும் சென்றனர்.

  வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் - தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே சந்தித்துப் பேசிய  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்திருந்தார்.  இதற்கிடையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னை சந்தித்துப் பேசப்போகும் தேதியும், இடமும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தெரிவித்திருந்தார்.

  அதற்கு முன்னதாக, தென்கொரியா அதிபர் மூன் ஜே - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான உயர்மட்ட சந்திப்பு வரும் 22-ம் தேதி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த சந்திப்பின்போது வடகொரியா அதிபருடன் பேசியது என்ன? வடகொரியாவை வழிக்கு கொண்டுவர அமெரிக்கா விதிக்க வேண்டிய நிபந்தனைகள் என்னென்ன? என்பது தொடர்பாக மூன் ஜே டிரம்ப்பிடம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. #Trump #SouthKoreanpresident
  Next Story
  ×