search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் பலி - 19 பேர் படுகாயம்
    X

    பாகிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் பலி - 19 பேர் படுகாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவுக்கு உட்பட்ட சரியப் சாலை வழியாக இன்று சென்றுகொண்டிருந்த பாதுகாப்பு படை வாகன அணிவகுப்பை வழிமறித்த தீவிரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தளபதி ஒருவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அந்த வாகனத்தில் அவர் பயணிக்கவில்லை என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இச்சம்பவத்துக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்று கொள்ளாத நிலையில் படுகாயகங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
    Next Story
    ×