100 பில்லியன் டாலர் Scholarship அறிவிப்பு.. கனடாவில் படிக்க இந்திய மாணவர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு

அனைத்து செலவுகளையும் கனடா அரசே ஏற்கும்.படிப்பின் ஒரு பகுதியை இந்தியாவிலேயே தொடங்கி, பின்னர் கனடாவில் தொடர வழிவகை.
100 பில்லியன் டாலர் Scholarship அறிவிப்பு.. கனடாவில் படிக்க  இந்திய மாணவர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு
Published on

கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை இந்தியாவுக்கு வந்திருந்த கனடா பிரதமர் மார்க் கார்னி பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

அதில் ஒன்று கனடாவில் கல்வி பயில இந்திய மாணவர்களுக்கு 100 மில்லியன் டாலர் (சுமார் 91.41 கோடி ரூபாய்) உதவித்தொகை ஒதுக்கீடு ஆகும்.

இந்த நிதியின் கீழ் ஆண்டுதோறும் 200 சிறந்த இந்திய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்குப் படிப்பு முடியும் வரை அனைத்து செலவுகளையும் கனடா அரசே ஏற்கும்.

இந்த உதவித்தொகைத் திட்டத்தை டொராண்டோ பல்கலைக்கழகம் முன்னின்று நடத்தும்.

'கனடா-இந்தியா திறமை மற்றும் புத்தாக்க உத்தி' திட்டத்தின் கீழ் இந்தியாவில் மூன்று இடங்களில் புதிய கல்வி மையங்கள் அமைக்கப்படும்.

மாணவர்கள் தங்கள் படிப்பின் ஒரு பகுதியை இந்தியாவிலேயே தொடங்கி, பின்னர் கனடாவில் தொடர இது வழிவகை செய்யும்.

செயற்கை நுண்ணறிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் கல்வி மையங்களில் ஆராய்ச்சிகள் நடைபெறும்.

மேலும் மார்க் கார்னி பயணத்தின் போது இரு நாட்டு கல்வி நிறுவனங்களுக்கு இடையே மொத்தம் 13 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

X

Maalai Malar
www.maalaimalar.com