search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இணையத்தில் லீக் ஆன மோட்டோ இ5 சீரிஸ்: முழு தகவல்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன மோட்டோ இ5 சீரிஸ்: முழு தகவல்கள்

    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.
    புதுடெல்லி:

    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் XT1922-4 மற்றும் XT1922-5 என்ற குறியீட்டு பெயரில் எஃப்.சி.சி. (FCC) வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளன. இவை மோட்டோ இ5 மற்றும் இ5 பிளஸ் ஸ்மார்ட்போன்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எஃப்.சி.சி வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் மோட்டோ இ சீரிஸ் தான் என்ற தகவல் இடம்பெறவில்லை என்றாலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என்பதை உறுதி செய்திருக்கிறது. முன்னதாக மோட்டோ இ5 ஸ்மார்ட்போனின் ரென்டர் இணையத்தில் கசிந்தது. இதில் ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்கள் தெரியவந்தது.

    வடிவமைப்பில் மோட்டோ இ4 மற்றும் புதிய இ5 ஸ்மார்ட்போன்களில் அதிக வித்தியாசம் இருக்காது என்றும் புதிய ஸ்மார்ட்போன் ஏப்ரல் 3-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் மோட்டோ இ4 ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


    புகைப்படம்: MySmartPrice

    புதிய மோட்டோ இ5 ஸ்மார்ட்போனில் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு வழங்கப்படலாம் என்றும் முன்பக்கம் ஹோம் பட்டன் நீக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போனில் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என்றும் புத்தம் புதிய மோட்டோரோலா பிரான்டிங் ஸ்மார்ட்போனின் முன்பக்கம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    மோட்டோ இ5 மற்றும் இ5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சார்ந்து முழுமையான சிறப்பம்சங்கள் வெளியாகாத நிலையில், இதில் 18:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்படுமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது. இத்துடன் பிரைமரி கேமரா, பிரத்யேக பிளாஷ் வசதி கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    வழக்கமான மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்படலாம் என்றும் முதற்கட்டமாக இவை ஆஃப்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு அதன் பின் ஆன்லைனில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுடன் மோட்டோ ஜி6 சீரிஸ், மோட்டோ X5 மற்றும் மோட்டோ Z3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என சமீபத்திய தகவல்களில் தெரிவிக்கப்பட்டது. மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போன்களில் மெல்லிய பெசல்கள் மற்றும் 18:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
    Next Story
    ×