என் மலர்

  செய்திகள்

  ஆண்டின் தலைசிறந்த கேட்ஜெட் விருது வென்ற சாம்சங் ஸ்மார்ட்போன்
  X

  ஆண்டின் தலைசிறந்த கேட்ஜெட் விருது வென்ற சாம்சங் ஸ்மார்ட்போன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் நடைபெற்று வரும் மொபைல் காங்கிரஸ் விழாவில் சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்டின் தலைசிறந்த கேட்ஜெட் விருது வழங்கப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  இந்திய தலைநகரில் செப்டம்பர் 27-ம் தேதி துவங்கிய இந்திய மொபைல் காங்கிரஸ் விழா இன்றுடன் (செப்டம்பர்-29) நிறைவு பெறுகிறது. இவ்விழாவில் புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

  அந்தவகையில் ஆண்டின் தலைச்சிறந்த கேட்ஜெட் (Gadget of the Year) விருது சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான கேலக்ஸி நோட் 8 பிக்ஸ்பி டிஜிட்டல் அசிஸ்டணட், எஸ் பென் உள்ளிட்ட சாதனங்களுடன் வெளியிடப்பட்டது.

  இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடலின் விலை ரூ.67,900 முதல் துவங்கும். முதற்கட்டமாக 64 ஜிபி மட்டும் விற்பனைக்கு வரும் என்றும் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்கள் விற்பனை தாமதமாக துவங்கும் என்றும் கூறப்படுகிறது.  சாம்சங் கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்:


  - 6.3 இன்ச் குவாட் எச்டி+AMOLED டிஸ்ப்ளே
  - குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
  - சாம்சங் எக்சைனோஸ் ஆக்டா கோர் சிப்செட் (சில சந்தைகளில் மட்டும்)
  - 6 ஜிபி ரேம்
  - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - ப்ளூடூத் 5.0, எல்டிஇ
  - 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா அமைப்பு
  - 8 எம்பி செல்ஃபி கேமரா
  - 3300 எம்ஏஎச் பேட்டரி
  - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்

  புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு ஐபோன் 7 பிளஸ் கேமராவிற்கு போட்டியாக இருக்கிறது. இத்துடன் எஸ்-பென், ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே, லைவ் மெசேஜஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×