என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்டநெரிசல் குறித்து அவதூறு: யூடியூபர் மாரிதாஸ் சென்னையில் கைது
- விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்
- தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.
இந்நிலையில், கரூர் விஜய் பிரச்சாரத்தின் போது 41 பேர் பலியான விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக கூறி மாரிதாஸை போலீசார் கைது செய்தனர்.
குறிப்பாக கரூர் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவு குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததால் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மாரிதாஸ் எக்ஸ் பக்கத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பதிவில், "கரூர் விவகாரத்தில் உண்மைக்கு புறம்பாக எதுவும் பேசவில்லை. அடுத்து கைது நடவடிக்கையை திமுக அரசு மேற்கொள்ள காரணம் விஜய்-க்கு நேற்று நீதிமன்றத்தில் நடந்தது அநீதி என்று இன்று நான் உண்மையை உடைத்தது தான் காரணம்.
மீண்டும் சொல்வேன் - விஜய் Tvk தரப்புக்கு எதுவும் தெரிவிக்கபடாமல் , அவர் தரப்பு வாதம் என்று எதுவும் இல்லாமல் நேற்று நடந்த நீதி விசாரனை நியாயமானது அல்ல. இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
விரிவாக முந்தய டிவிடில் சொல்லியுள்ளேன். முழு விவரத்தையும் மக்கள் முன் வைக்கிறேன். சில மணி நேரத்தில்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






