என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அத்துமீறிய தமிழக வாலிபர்... கையை கடித்து தப்பிய கேரள இளம்பெண்
- இளம்பெண் பணி முடிந்து வீடு திரும்பியபோது அவரை பின்தொடர்ந்து வந்த நபர் அவரிடம் அத்துமீறி நடந்து உள்ளார்.
- விசாரணை நடத்திய துரைப்பாக்கம் போலீசார் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற நபரை கைது செய்தனர்.
பணி முடிந்து வீடு திரும்பிய பெண்ணை இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெருங்குடியில் ஐ.டி. ஊழியரான கேரளாவை சேர்ந்த இளம்பெண் (24) பணி முடிந்து வீடு திரும்பியபோது அவரை பின்தொடர்ந்து வந்த நபர் அவரிடம் அத்துமீறி நடந்து உள்ளார்.
இளம்பெண்ணின் வாயை மூடி இழுத்துச்சென்ற வாலிபரின் கையை கடித்துவிட்டு இளம்பெண் தப்பி உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய துரைப்பாக்கம் போலீசார் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற நபரை கைது செய்தனர். யோகேஸ்வரன் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைதான யோகேஸ்வரன் காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.






