என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மகளிர் உரிமைத்தொகைக்கும் தகுதியானவர்கள் இடம்பெற உதவ வேண்டும்- நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
- 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சியில் போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டசபை தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
- இதுவரை மொத்தமாக 38 நாட்களில் 81 சட்டசபை தொகுதி நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சியில் போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டசபை தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது நிர்வாகிகளிடம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியானவர்களை இடம்பெற செய்ய உதவ வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
இதுவரை மொத்தமாக 38 நாட்களில் 81 சட்டசபை தொகுதி நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்துள்ளார்.
Next Story






