என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாநிலங்களவை எம்.பி. ஆகும் அண்ணாமலை? - பாஜக தலைமை ஆலோசனை
    X

    மாநிலங்களவை எம்.பி. ஆகும் அண்ணாமலை? - பாஜக தலைமை ஆலோசனை

    • அண்ணாமலையை மாற்ற வேண்டும் பா.ஜ.க. தலைமைக்கு அ.தி.மு.க. அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அ.தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதி செய்தார்.

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பொறுப்பு ஏற்று அண்ணாமலை பணியாற்றி வந்தார். இவரது தலைமையிலான பா.ஜ.க.வினர் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவே தலைமை கருதியது. இருப்பினும் இவர் மீது அ.தி.மு.க.வினர் அதிருப்தியில் இருந்தனர். கூட்டணி தொடர வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் பா.ஜ.க. தலைமைக்கு அ.தி.மு.க. அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து, சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அ.தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதி செய்தார். அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலை மாற்றம் குறித்து கேட்டதற்கு, பா.ஜ.க.வின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்படும் என அமித்ஷா சூசகமாக தெரிவித்தார். இதற்கு மறுநாளே பா.ஜ.க. மாநில புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அதனை தொடர்ந்து, பா.ஜ.க. யுவமோர்ச்சா (BJYM) பிரிவு தேசிய தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு அண்ணாமலை தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜ.க. மத்திய தலைமை பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×