நினைவு தினம்..! கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் உருவப்படத்திற்கு விஜய்வசந்த் எம்.பி., மலர் தூவி மரியாதை

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி அவர் இயற்கை எய்தினார்.மயிலாடி தியாக சுடர் காமராஜர் பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைவாணர் படத்திற்கு மரியாதை.
நினைவு தினம்..! கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் உருவப்படத்திற்கு விஜய்வசந்த் எம்.பி., மலர் தூவி மரியாதை
Published on

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி அவர் இயற்கை எய்தினார்.

இந்நிலையில், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடி தியாக சுடர் காமராஜர் பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைவாணர் என்.எஸ்.கே திருவுருவ படத்திற்கு கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் நாகர்கோவில் காங்கிரஸ் நவீன்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், வட்டார தலைவர் தங்கம், மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன், மாவட்ட செயல் தலைவர் மகாலிங்கம், மாவட்ட துணை தலைவர் கிங்ஸ்டன், வட்டார பொருளாளர் ஏ. நாகராஜன், வட்டார செயலாளர் ஏசுதாஸ், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் அருண், முத்துகுட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com