என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோலாகலமாக நடைபெறும் 2-ம் ஆண்டு தொடக்க விழா - த.வெ.க. தொண்டர்கள் உற்சாகம்
- 'Get Out' கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.
- பா.ஜ.க.வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய வந்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கியது. விழா மேடைக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தொடங்கியது.
முதலில் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின்னர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து 'Get Out' கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் '2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சியமைக்க போகுது' கண்டா வரச்சொல்லுங்க பாடல் புகழ் பாடகி கிடாக்குழி மாரியம்மாள் பாடலை பாடினார். இதனை தொடர்ந்து விஜய்க்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய மாரியம்மாளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த விஜய் புத்தகத்தை பரிசாக வழங்கி குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதனிடையே, பா.ஜ.க.வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய வந்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் போதிய இருக்கை வசதி, காலை உணவு வழங்கப்படவில்லை என பல சலசலப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






