என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நம்பிக்கையோடு இருங்கள்! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்! - விஜய்
- நான் மாநில வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல.
- உங்களுக்காக சட்டத்திற்கு உட்பட்ட எல்லா வழிகளிலும் நானும், த.வெ.க.வினரும் உறுதுணையாக இருப்போம்.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியதாவது:
* பரந்தூர் கிராமத்திலிருந்து தனது கள அரசியல் பயணத்தை தொடங்குகிறேன்.
* வீட்டிற்கு பெரியவர்களை போல் நாட்டிற்கு மிக முக்கியமானவர்கள் விவசாயிகள்.
* நான் மாநில வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. வேறு இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.
* உங்களுக்காக சட்டத்திற்கு உட்பட்ட எல்லா வழிகளிலும் நானும், த.வெ.க.வினரும் உறுதுணையாக இருப்போம்.
* வளர்ச்சி என்ற பெயரில் ஏற்படும் அழிவு மக்களை அதிகம் பாதிக்கும். பரந்தூர் விமான நிலையத்துக்கான இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
* Confident ஆக இருங்கள், வெற்றி நிச்சயம் என்று அவர் பேசினார்.
Next Story






