என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி காலமானார்
    X

    வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி காலமானார்

    • 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றிருந்தார்.
    • 60 வயதான அமுல் கந்தசாமி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

    60 வயதான அமுல் கந்தசாமி உடல்நல குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகலில் அவர் உயிரிழந்தார்.

    2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளரை 13,171 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமுல் கந்தசாமி வெற்றி பெற்றிருந்தார்.

    Next Story
    ×