என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்..! முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்

    • திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
    • 1,330 திருக்குறள்களும் பளிங்கு கற்களில் செதுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் திருவள்ளுவரின் நினைவாக 1974-1976 ஆம் ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது.

    இது திராவிட மற்றும் பல்லவர் கட்டிடக்கலை பாணியில், 5 ஏக்கர் பரப்பளவில் ஒரு முக்கிய நினைவுச்சின்னமாக அமைந்துள்ளது.

    10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைந்திருந்த வள்ளுவர் கோட்டம், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

    பணிகள் நிறைடைந்த நிலையில், வள்ளுவர் கோட்டம் புதிய பொலிவுடன் நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    வள்ளுவர் கோட்டத்தில், அய்யன் வள்ளுவர் கலையரங்கம்: 1,548 இருக்கைகளுடன் அதிநவீன ஏர் கண்டிஷனர் வசதி, குறள் மணிமாடம்: 1,330 திருக்குறள்களும் பளிங்கு கற்களில் செதுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன.

    மேலும், திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் நூலகம்: 100 பேர் அமரக்கூடிய ஆராய்ச்சி மையம், மல்டி-லெவல் பார்க்கிங்: 164 வாகனங்கள் நிறுத்த வசதி, உணவகம் (கஃபெடேரியா) மற்றும் ஒலி-ஒளி காட்சிக்கூடம் உள்ளிட்ட புதிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×