என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை விமான நிலையம் அருகே பலூன், லேசர் பயன்படுத்த தடை
- சென்னையில் கடந்த 2 வாரங்களில் விமானங்களின் மீது 3 முறை லேசர் ஒளி அடிக்கப்பட்டது .
- இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் அருகே தரையிறங்கும் விமானங்களின் மீது தொடர்ச்சியாக லேசர் லைட் அடிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
விமானம் தரையிறங்கும்போது லேசர் ஒளியை செலுத்தினால் விமானிக்கு பாதிப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னையில் கடந்த 2 வாரங்களில் விமானங்களின் மீது 3 முறை லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையம் அருகே லேசர் மற்றும் பலூன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி லேசர் மற்றும் பலூன்களை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story






