என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு
- பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று நள்ளிரவு சென்னை வந்தடைந்தார்.
- அவரை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
சென்னை:
தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா மே 3-ம் தேதி சென்னைக்கு வருகை தரவுள்ளாா். அப்போது மாநில நிா்வாகிகளுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தவுள்ளாா் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று நள்ளிரவு சென்னை வந்தடைந்தார். அவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவானதைத் தொடா்ந்து கூட்டணியை விரிவாக்கம் செய்து பலப்படுத்துதல், கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், பா.ஜ.க.வினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது தொடா்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.