என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா
    X

    இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா

    • வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர தயாள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருக்கோகர்ணத்தில் பாலன் நகர் அருகே பள்ளத்திவயல் பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசுகிறார்.

    இதையொட்டி பாதுகாப்பு காரணம் கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும், பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர தயாள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜோஸ் நிர்மல் குமார், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா ஆகியோர் உடன் இருந்தனர்.

    இன்று மாலை புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பரப்புரை பயண நிறைவு விழாவில் அமித் ஷா பங்கேற்க உள்ள நிலையில், தமிழகம் வந்தனைந்தார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    Next Story
    ×