என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஈரோட்டில் த.வெ.க. பொதுக்கூட்டம் - பொருளாளருக்கு அனுமதி மறுப்பு
    X

    ஈரோட்டில் த.வெ.க. பொதுக்கூட்டம் - பொருளாளருக்கு அனுமதி மறுப்பு

    • காலை 6 மணி முதல் தொண்டர்கள் குவியத் தொடங்கி உள்ளதால் அப்பகுதி முழுவதும் த.வெ.க. தொண்டர்களால் நிரம்பி உள்ளது.
    • பரந்தூர், மாமல்லபுரத்திலும் வெங்கட்ராமன் தடுத்து நிறுத்தப்பட்டார்.

    ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

    60 ஏக்கரில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தம், 20 ஏக்கரில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தம் என வாகன நிறுத்தத்துக்காக மட்டும் 80 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது.

    மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

    பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நள்ளிரவு 12 மணி முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து த.வெ.க. தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து காலை 6 மணி முதல் மேலும் தொண்டர்கள் குவியத் தொடங்கி உள்ளதால் அப்பகுதி முழுவதும் த.வெ.க. தொண்டர்களால் நிரம்பி உள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சென்ற த.வெ.க. பொருளாளரை போலீசார் தடுத்தி நிறுத்தினர். விவிஐபி லிஸ்டில் வெங்கட்ராமன் பெயர் இல்லாததால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

    ஏற்கனவே பரந்தூர், மாமல்லபுரத்திலும் வெங்கட்ராமன் தடுத்து நிறுத்தப்பட்டார். காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதையடுத்து அவர்களுடன் வெங்கட்ராமன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    Next Story
    ×