என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திமுக, பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் ஒருபோதும் சமரசம் இல்லை: விஜய் திட்டவட்டம்

    • பாஜக உடன் கூட்டணி வைக்க த.வெ.க. ஒன்றும் அதிமுக, திமுக கிடையாது.
    • திமுக, பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் ஒருபோதும் சமரசம் இல்லை.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது:-

    மத்திய அரசு அளவில் மலிவான அரசியல் ஆதாயத்திற்காக மக்களை மத ரீதியாக பிளவுப்படுத்தி, மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர்காய நினைக்கிறது பாஜக. அவர்களுடைய இந்த விஷமத்தனமான வேலைகள் வேறு எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது.

    சமூக நீதியும், நல்லிணக்கமும், சகோரத்துவமும், சமத்துவமும் ஆழமாக வேரூன்றிய மண் இந்த தமிழ்நாட்டு மண். எனவே இங்கே தந்தை பெரியாரை அவமதித்தோ, அறிஞர் அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ தமிழ்நாட்டில் உள்ள மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் அதனால் பாஜகவால் ஒருபோதும் வெற்றி பெற இயலாது.

    சுயநல அரசியல் லாபங்களுக்காக கூடி குலைந்து கூட்டணி போக தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவோ, திமுகவோ இல்லை.

    கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவே கூட்டணி இல்லை என்பதில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருக்கிறது.

    கூட்டணி என்றாலும் தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக மற்றும் பாஜகவுக்கு எதிராகத்தான் இருக்கும் என்பதையும், அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் உறுதிபட செயற்குழு வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம். இது இறுதியான தீர்மானம் அல்ல. உறுதியான தீர்மானம்.

    நாம் எல்லோருக்கும் வாழ்வாதாரம் இருக்கும். இல்லை என்று சொல்லவில்லை. நம்முடைய வாழ்வாதாரத்தில் விவசாயிகள் முக்கியமானவர்கள். அப்படிப்பட்ட விவசாயிகளுடன் நிற்க வேண்டியது நமது கடமை. அந்த கடமையை நாம் சரியாக செய்தே ஆக வேண்டும். நாம் எப்போதும் விவசாயிகள் பக்கம் நிற்போம், நிற்போம், நிற்போம். நின்றே தீருவோம்.

    Next Story
    ×