என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தீபாவளி கொண்டாட்டம் வேண்டாம்- தொண்டர்களுக்கு த.வெ.க. வேண்டுகோள்
    X

    தீபாவளி கொண்டாட்டம் வேண்டாம்- தொண்டர்களுக்கு த.வெ.க. வேண்டுகோள்

    • த.வெ.க.வினர் யாரும் இந்தாண்டு தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று த.வெ.க. சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • கரூர் சம்பவத்தால் நம்மை விட்டு பிரிந்த சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபாவளி கொண்டாட வேண்டாம்.

    சென்னை:

    கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பிறகு த.வெ.க.வினர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையோ, கொண்டாடுவதையோ தவிர்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில், கரூர் துயரத்தில் பங்கேற்கும் விதமாக த.வெ.க.வினர் யாரும் இந்தாண்டு தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று த.வெ.க. சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில், த.வெ.க சார்பில் யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். கரூர் சம்பவத்தால் நம்மை விட்டு பிரிந்த சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×