என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டங்ஸ்டன் சுரங்க விவகாரம்... சட்டசபையில் திமுக - அதிமுக காரசார விவாதம்
- சட்டத்தை திருத்தி டங்ஸ்டன் ஏலம் விடும் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்தது.
- டங்ஸ்டன் சுரங்கத்தை தடுக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்தது.
தமிழக சட்டசபையில் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீது உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநில உரிமை பறிபோகும்போது பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டபோது தமிழக அரசு அமைதியாக இருந்தது என்று இபிஎஸ் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
* சட்டத்தை திருத்தி டங்ஸ்டன் ஏலம் விடும் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்தது.
* தவறான செய்திகளை திருப்பி திருப்பி பதிவு செய்யக்கூடாது.
* மத்திய அரசுக்கு கைகட்டி நிற்கும் வேலைக்காரனா மாநில அரசு.
* மத்திய அரசு மாநில அரசின் சுயமரியாதைக்கு சவால் விடுத்தது.
* ஆண்டான் அடிமை மனநிலையில் மத்திய அரசு செயல்படுகிறது.
* டங்ஸ்டன் சுரங்கத்தை தடுக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்தது.
* ஏலம், குத்தகை உரிமையை மாநில அரசுக்கு அளிக்க கோரி கடிதம் எழுதினேன்.
அமைச்சர் கடிதம் எழுதியது எங்களுக்கு எப்படி தெரியும் என இபிஎஸ் எதிர் கேள்வி எழுப்பினார்.
* நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது எத்தனை கடிதத்தை வெளியிட்டீர்கள்.
* கடிதங்களில் இருந்த விபரங்களை அவையில் கூறி விட்டேன் என்று அவர் கூறினார்.






