திருப்பத்தூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
திருப்பத்தூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
Published on

திருப்பத்தூர்:

தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன்காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், மழை முன்னெச்சரிக்கை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிவ.சௌந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். இன்று சனிக்கிழமை என்பதால் அரசு பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com