என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் | NEET
- 'நீட்' தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் 7-ந்தேதி வெளியிடப்பட்டு, விண்ணப்பப்பதிவு 8-ந்தேதி முதல் தொடங்கியது.
- விண்ணப்பிப்பதற்கு 11-ந்தேதி (இன்று) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
சென்னை:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' தேர்வு மதிப்பெண் அவசியம். அந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் 2026-27-ம் கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 'நீட்' தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் (பிப்ரவரி) 7-ந்தேதி வெளியிடப்பட்டு, விண்ணப்பப்பதிவு 8-ந்தேதி முதல் தொடங்கியது. விண்ணப்பிக்க முதலில் கடந்த 8-ந்தேதி கடைசிநாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் அவகாசம் வழங்க மாணவ-மாணவிகள், பெற்றோரிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.
அதனை கருத்தில் கொண்டு, விண்ணப்பிப்பதற்கு 11-ந்தேதி (இன்று) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன் படி, இன்றுடன் (புதன்கிழமை) விண்ணப்பப்பதிவு நிறைவு பெற உள்ளது. மேலும் அவகாசம் வழங்கப்படாது என தேர்வை நடத்தக்கூடிய தேசிய தேர்வு முகமை திட்டவட்ட மாக ஏற்கனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.






