என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவையை போல..! முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி
- கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவையை போல மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம்,
- இதுபோன்ற நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநில அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யும் திட்டங்களுக்கு பிரதமர் பெயரை வைப்பது தொடர்பாக, எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடியாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
இந்தியா முழுவதும், மொத்தம் 54 மத்திய அரசு உதவியில் செயல்படும் திட்டங்களும், 260 மத்திய அரசின் பல்வேறு துறைகளின் நேரடி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில், வரிப்பகிர்வு, மானியங்கள், உதவித் தொகை, திட்டங்களுக்கான பங்கீடு, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைத் திட்டங்கள் என ₹5,47,280 கோடி நிதி, மத்திய அரசு வழங்கியுள்ளது.
உண்மை இப்படி இருக்க, முரசொலியை திமுகவினரே படிப்பதில்லை என்பதற்காக, ஆங்கில முரசொலியில் தங்கள் வசதிக்கேற்ற கதைகளை எழுதச் சொல்லி, அதைக் கொண்டு வந்தால், மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவையை போல, மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம், இது போன்ற நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது.
இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.