என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற தூத்துக்குடி த.வெ.க. பெண் நிர்வாகி அஜிதாவிற்கு 2-வது நாளாக தீவிர சிகிச்சை
- தூத்துக்குடி தமிழ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
- 10-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டதால் மயக்க நிலையில் உள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் அஜிதா ஆக்னல். தமிழக வெற்றிக்கழக கட்சி நிர்வாகி. இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத காரணத்தினால் சென்னை பனையூரில் அக்கட்சி தலைவரான நடிகர் விஜயின் காரை முற்றுகை யிட்டு அஜிதா மற்றும் அவரது ஆதர வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் கட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அஜிதா ஆக்னல் 3 நாட்களாக உணவு அருந்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் 15 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அவரை அவரது கணவர் உள்ளிட்டோர் உடனடியாக தூத்துக்குடியில் தங்கள் வீட்டருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி தமிழ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறும்போது, அஜிதா ஆக்னலுக்கு தற்போது எக்ஸ்ரே போன்ற பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தூக்க மாத்திரைகளின் செயல்பாட்டை குறைக்கும் விதமான மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய பாதிப்பு இல்லை. 10-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டதால் மயக்க நிலையில் உள்ளார்.விரைவில் குணமடைவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவருக்கு இன்று 2-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அஜிதா ஆக்னல் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்.






