என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எல்லா ஆட்சிக் காலத்திலும் போலீசாரின் விசாரணை முறை இப்படித்தான் இருக்கிறது- திருமாவளவன்
- அஜித்குமாரின் படத்திற்கும் மலர்தூவி, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
- அஜித்குமாரின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்கைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அஜித்குமாரின் படத்திற்கும் மலர்தூவி, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
காவல்நிலைய மரணங்கள் என்பது எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது. யார் முதல்வராக இருந்தாலும் நடக்கிறது.
நானும் காவல்நிலைய விசாரணையை எதிர்கொண்டவன் தான். போலீசாரின் தமிழ் விசாரணை போக்குபற்றி நன்றாக தெரியும்.
அடித்தால் தான் உண்மையை வரவழைக்க முடியும் என போலீசார் நினைக்கிறார்கள். அவர்களுக்கு பயிற்சி அவசியம்.
திமுக ஆட்சி, அதிமுக ஆட்சி என்றில்லை. எல்லா காலத்திலும் போலீசாரின் விசாரணை முறை இப்படியாகத்தான் இருக்கிறது.
முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பது ஆறுதலைத் தருகிறது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது முதலமைச்சரின் நேர்மையை காட்டுகிறது.
காவல்துறையினர் ரவுடிகளைப் போல நடந்து கொள்வதாக ஒருமுறை உச்சநீதிமன்றமே குறிப்பட்டது.
புலன் விசாரணையை எவ்வாறு நடத்த வேண்டும் என்று 11 கட்டளைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை எந்த காவல்நிலையத்திலும் பின்பற்றுவதில்லை.
அஜித்குமார் கொலை என்பது வெறும் அத்துமீறல் மட்டுமல்ல, அரச பயங்கரவாதம்.
அஜித்குமாரின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






