என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருவேற்காடு ஆதி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    திருவேற்காடு ஆதி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மே 30-ந்தேதி கோவிலில் பந்தக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சூரிய சோம கும்ப பூஜை ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பூந்தமல்லி:

    புகழ்பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றான திருவேற்காட்டில் சிவன் கோவில் அருகே ஸ்ரீ ஆதி கருமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மே 30-ந்தேதி கோவிலில் பந்தக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 1-ந்தேதி விநாயகர் வழிபாடு, கிராம தேவதை பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து கடந்த 3-ந்தேதி விக்னேஸ் வர பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை, கஜ பூஜை, லட்சுமி ஹோமம், பிரம்மச் சாரிய பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணா ஆகூதி, மகாதீபாராதனை நடைபெற்றது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை தொடங்கியது. சூரிய சோம கும்ப பூஜை ஹோமம், பவனாபி ஷேகம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து மூலமூர்த்திக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சியும் தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிலையில் நான்காம் கால யாக பூஜை, சிறப்பு ஹோமம், தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 8 மணியளவில் வேத சிவாகம வித்யாபூஷனம் ஸ்தானிகர் சந்திரசேகர சிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கோபுர கலசங்கள் மற்றும் விமான கும்பாபிஷேகம், மூலவர் ஆதி கருமாரியம்மன், மற்றும் பரிவார மூர்த்திகள் விநாயகர், பாலமுருகன், பால சாஸ்தா, மகா கும்பாபி ஷேகமும், மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.

    அப்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் ரமேஷ், திருவேற்காடு நகர மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், டி.ஜெயக்குமார், மற்றும் பல்வேறு மடங்கள், ஆன்மீக ஆதீனங்களைச் சேர்ந்த ஆன்மிகவாதிகள் மற்றும் திருவேற்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சாண்டி பி.செல்வராஜ், ஏ.நாராயணன், பி.கோவிந்தசாமி, கே.சந்துரு, ஏ.ஆர். பாலசுப்ரமணியன், டி.பாபுசேகர், இரா.சகா தேவன், ஏ.கே.சுப்பிரமணிய முதலியார், மீனாட்சி அம்மாள் குடும்பத்தினர், அரிமா ஆன்மீக அன்பர்கள் குழு, ஏ.கே.எஸ்.பிரதர்ஸ் குடும்பத்தினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×