என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. எத்தனை தொகுதியில் போட்டியிடும்  - திருமாவளவன் பேட்டி
    X

    தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. எத்தனை தொகுதியில் போட்டியிடும் - திருமாவளவன் பேட்டி

    • 2011 சட்டசபை தேர்தலை தி.மு.க.வுடன் சந்தித்தோம்.
    • 2021 தேர்தலில் 6 தொகுதிகள் என்ற நிலையில் நாங்கள் தொகுதியை குறைத்து கொள்ளும் சூழல் உருவானது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    ஒவ்வொரு தேர்தலிலும் இரட்டை இலக்கு தொகுதிகளை பெற முயற்சி மேற்கொண்டு வருகிறோம். 2001-ல் இரட்டை இலக்கு தொகுதி தருவதாக கூறி தமிழகத்தில் 8 தொகுதிகளும் புதுச்சேரியில் 2 தொகுதிகளும் என மொத்தம் 10 தொகுதிகளை கலைஞர் கருணாநிதி ஒதுக்கினார். இதுவும் இரட்டை இலக்கு என்ற அடிப்படையில் எடுத்துக் கொண்டோம்.

    2011 சட்டசபை தேர்தலை தி.மு.க.வுடன் சந்தித்தோம். அந்த தேர்தலில் முதலில் 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பிறகு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற தேவையை கருதி எங்களிடம் இருந்து 2 தொகுதிகள் திரும்ப கேட்டு பெற்றுக் கொண்டனர். ஆக 10 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

    2021 தேர்தலில் 6 தொகுதிகள் என்ற நிலையில் நாங்கள் தொகுதியை குறைத்து கொள்ளும் சூழல் உருவானது. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் அந்த நேரத்தில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் எண்ணிக்கையை பொறுத்து தேவையை பொறுத்து அவரவர் முன் வைக்கக் கூடிய கோரிக்கைகளை பரிசீலித்து தி.மு.க. முடிவு செய்கிறது.

    எனவே போன முறை 6 தொகுதிகளை ஒதுக்கிய நிலையில் அதற்கு உடன்பட்டு கூட்டணியில் இடம் பெற்றோம். இப்போதும் நாங்கள் இரட்டை இலக்கு தொகுதிகளை கேட்போம். அது வழக்கமான ஒன்றுதான் புதிய முயற்சி அல்ல.

    எல்லா சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு எல்லா கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு எங்களுக்குள் பேசி சுமூகமாக தொகுதிகள் பங்கீடு செய்து கொள்வோம். அதை ஒரு நிபந்தனையாக எப்போதும் நாங்கள் முன் வைத்தது இல்லை. இந்த முறையும் நாங்கள் முயற்சிப்போம் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×